×

ஒரே நாடு ஒரே இட்லி சுட பார்க்கிறார் மோடி: போட்டு தாக்கும் கருணாஸ்

தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் உசிலம்பட்டி பகுதியில் பேசியதாவது: மக்களின் வரிப்பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்க வேண்டும் என நினைக்கும் இந்தியா கூட்டணி வேண்டுமா, மக்களின் வரிப்பணத்தை பெரும் முதலாளிகளுக்கு கடனாக கொடுத்துவிட்டு வசூல் செய்ய முடியாத பாஜ வேண்டுமா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பாஜ ஒவ்வொருவரையும் மத ரீதியாக பிரித்து அரசியல் செய்கிறது. இந்த தேசத்தையும், மொழியையும் அழிக்க நினைக்கிறார் மோடி. ஒரே நாடு, ஒரே இட்லி என சுட பார்க்கிறார். இந்த பூமிக்கான அரசியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். இந்த மொழி, இனம் காக்கப்பட வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தேன், இப்போது வந்து நிற்கிறேன் என கூறும் டிடிவி தினகரன் இத்தனை ஆண்டுகளாக எங்கே போனார். சொந்தக்காரன் திருடினாலும், திருடன் என்பது தான் பொருள். அதில் சாதி, மதம் என்ன? பாஜவுடன் இணைந்ததால், மோடி புனிதராக மாறிவிட்டதாக சொல்கிறார். இவ்வாறு பேசினார்.

The post ஒரே நாடு ஒரே இட்லி சுட பார்க்கிறார் மோடி: போட்டு தாக்கும் கருணாஸ் appeared first on Dinakaran.

Tags : Modi ,Karunas ,DMK ,Thanga Tamilselvan ,Theni Constituency ,LTTE ,Usilampatti ,India ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி